If Anybody want to add your advertisement here means please contact me at marthandamarea@gmail.com we will serve free service for you

Thursday, 23 October 2014

Modi in sabarimala

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இந்த விழாக்கள் நடைபெறும். இந்த விழாக்களின்போது நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கோவிலில் திரண்டு சுவாமியை வழிபடுவார்கள். அப்போது முக்கிய பிரமுகர்களும் வருவது வழக்கம்.
இம்முறை பிரதமர் நரேந்திரமோடி சபரிமலைக்கு வர வாய்ப்புள்ளதாக கேரள மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் முரளீதரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை விழா அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி கேரளா வந்தபோது சபரிமலையின் சிறப்பு பற்றியும், அய்யப்ப சாமியின் மகிமை குறித்தும் எடுத்துச் சொன்னோம். மலையில் அமைந்திருக்கும் அந்த கோவிலுக்கான மலை பயணம் குறித்தும் தெரிவித்தோம்.
தற்போது மண்டல பூஜை தொடங்க இருப்பதை அடுத்து பிரதமர் மோடி இங்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தோம்.
பிரதமர் நரேந்திரமோடி சபரிமலை வரும்பட்சத்தில் அவர் செல்லவேண்டிய மலை பாதை, பார்க்க வேண்டிய முக்கிய கோவில்கள், அங்கு உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சபரிமலைக்கு வருவார் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் இந்த சீசனுக்கு சபரிமலை வருவார் என மாநில பாரதீய ஜனதா கட்சி உறுதியாக நம்புகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் மாநில அரசு பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்கவில்லை.
கடந்த ஆண்டு சபரிமலை செல்லும் சாலைகளை சீரமைக்க ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிதி மூலம் எந்த சாலையும் சரியாக சீரமைக்கப்படவில்லை. இதை கண்டித்து மாநில பாரதீய ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட உள்ளது. பஞ்சாயத்து வாரியாக இந்தப் போராட்டம் முன் எடுத்து செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment