Prime Minister Nareendra Modi, who is planning to visit Sabarimala is likely to stay in Kumarakam.
Officials of security will visit Kumarakam soon to supervise the arrangements.
Arrangements are also going on to repair the road that leads to the hotel where the PM is likely to stay.
The repair works of Kumarakom road is on in a war-footing ahead of the visit by the PM.
Prior to this, top district officials have inspected Kumarakom road and adjacent buildings.
Due to security reasons, the PM is expected to visit Sabarimala only after the pilgrimage season ends.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக புகழ் பெற்றதாகும்.
இங்கு சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சபரிமலையில் பல்வேறு வசதிகளை பக்தர்களுக்கு செய்து கொடுக்க வசதியாக சபரிமலையை தேசிய ஆன்மீக தலமாக அறிவிக்க வேண்டுமென்று கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியை சபரிமலைக்கு வரவழைக்க கேரள பாரதீய ஜனதா கட்சியினரும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுதொடர்பாக அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் டெல்லிக்கு சென்று இதுபற்றி கட்சி நிர்வாகிகளிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி சபரிமலைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது. தற்போது சபரிமலையில் மண்டல பூஜை காலம் என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திரள்வார்கள். எனவே இந்த சீசன் முடியும் தருவாயில் பிரதமர் நரேந்திர மோடி சபரிமலைக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி சபரிமலை வருகையின்போது, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குமரகத்தில் அவரை தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குமரகம் பகுதி பிரதமரின் பாதுகாப்புக்கு ஏற்ற இடமாக கருதப்படுகிறது. மோடி வருகையை தொடர்ந்து அங்கு சாலைகள் சீரமைப்பு உள்பட பல்வேறு பணிகள் தொடங்கி உள்ளது.
மேலும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் விரைவில் இங்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய உள்ளனர்.
கடந்த 2000–ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது குமரகத்தில் தங்கியது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment