Southern Railway announces 90 special trains for Sabarimala | சபரிமலை சீசன்: சென்னையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சபரிமலை சீசனை முன்னிட்டு, சென்னையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிரீமியம் சூப்பர் பாஸ்ட்
''கொச்சுவேலி-சென்னை சென்டிரல் பிரீமியம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (வண்டி எண்:00652), கொச்சுவேலியில் இருந்து வருகிற 17, 21, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
மறுமார்க்கமாக, சென்னையில் இருந்து 16, 22, 23, 24, 30 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல்-கொச்சுவேலி பிரீமியம் சூப்பர்பாஸ்ட் (00651), மறுநாள் காலை 6.20 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.
இந்த ரயில் கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன் மற்றும் காட்பாடி ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
அதேபோல், கொச்சுவேலி-சென்னை சென்டிரல் பிரீமியம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (00654) வருகிற 15, 22, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) கொச்சுவேலியில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு, சென்டிரலுக்கு மறுநாள் பிற்பகல் 12.25 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கமாக, சென்டிரல்-கொச்சுவேலி பிரீமியம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (00653) வருகிற 18 ஆம் தேதி இரவு 10.30 புறப்பட்டு, மறுநாள் காலை 12.45 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும். இந்த சிறப்பு பிரீமியம் ரயில்களுக்கான முன்பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
சூப்பர் பாஸ்ட் ரயில்கள்
எர்ணாகுளம்-சென்னை சென்டிரல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06346), வருகிற 20, 27 தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்டிரலை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னையில் இருந்து 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் சென்டிரல்-எர்ணாகுளம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06345), மறுநாள் காலை 10.50 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரயில் அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
இதேபோல், திருவனந்தபுரம்-சென்னை சென்டிரல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06348), திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.35 மணிக்கு சென்னையை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னையில் இருந்து 20, 27 ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06347), மறுநாள் காலை 11 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும்.
இந்த ரயில் கொல்லம், காயங்குளம், செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். சென்னையில் இருந்து வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும், சென்னை சென்டிரல்-கொச்சுவேலி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06349), மறுநாள் காலை 6.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

18 Hills associated with sabarimala

Makara Jyothi 2016 – Sabarimala Makaravilakku Festival on 15 January 2016

Makara Jyothi 2025: Significance, Rituals & Spiritual Journey of Sabarimala Makaravilakku